Friday, October 16, 2009

யார் நிறமானவர்கள்?

ஆபிரிக்க சிறுவனொருவனால் எழுதப்பட்ட இந்த கவிதை, ஐக்கிய நாடுகள் சபையினால் சிறந்த கவிதையாக பரிந்துரை செய்யப்பட்டது. (ஆங்கிலத்தில் இணையத்தில் கிடைத்த இந்த கவிதையை தமிழாக்கும் சிறிய முயற்சி).

பிறக்கும் போது, நான் கறுப்பு
வளரும் போது, நான் கறுப்பு
வெயிலில் செல்லும் போது, நான் கறுப்பு
பயப்படும் போது, நான் கறுப்பு
சுகவீனமுற்றாலும், நான் கறுப்பு
ஏன்,
இறந்த பின்னரும், நான் கறுப்பு


ஆனால்,
வெள்ளையர் நீங்களோ!
பிறக்கும் போது, நீங்கள் இளஞ்சிவப்பு
வளரும் போது, நீங்கள் வெள்ளை
வெயிலில் செல்லும் போது, நீங்கள் சிவப்பு
குளிர் காலத்தின் போது, நீங்கள் நீலம்
பயந்தால், நீங்கள் மஞ்சள்
சுகவீனமுற்றால், நீங்கள் பச்சை
ஏன்!
நீங்கள் இறந்தால் சாம்பல் நிறம்..

நீங்கள் எப்படி,
எங்களை நிறமானவர்கள் என்று சொல்ல முடியும்?

(மின்னஞ்சல் ஊடாக கிடைத்த பல பயனுள்ள அஞ்சல்களை பகிர்ந்துகொள்ளும் நோக்கில் இந்த வலைப்பூவை ஆரம்பித்துள்ளேன். புதிய முயற்சியெல்லாம் இல்லை. ஒரு பகிரும் நடவடிக்கை மாத்திரமே. ஏற்கனவே பார்த்த பல வலைப்பூக்களின் பாதிப்பு என்று கூட சொல்லலாம்.)


2 comments:

  1. நானும் இக் கவிதையை வாசித்து ரசித்திருக்கிறேன். பதிவிட்டதற்கு நன்றி

    ReplyDelete
  2. i like this kavidai.i need natpu kavidai.

    ReplyDelete